சினிமா செய்திகள்

கேரளா வெள்ள நிதிக்கு நடிகர்கள் பிரபு-விக்ரம் பிரபு ரூ.10 லட்சம் உதவி + "||" + Prabhu-Vikram Prabhu Rs 10 lakh assistance

கேரளா வெள்ள நிதிக்கு நடிகர்கள் பிரபு-விக்ரம் பிரபு ரூ.10 லட்சம் உதவி

கேரளா வெள்ள நிதிக்கு நடிகர்கள் பிரபு-விக்ரம் பிரபு ரூ.10 லட்சம் உதவி
கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள்.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் குடும்பத்தின் சார்பில் அவருடைய மகன் நடிகர் பிரபு, பேரன் நடிகர் விக்ரம் பிரபு ஆகிய இருவரும் ரூ.10 லட்சம் நிதி உதவி செய்தார்கள்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நடிகர் பிரபு போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, “கேரள மக்கள் துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்” என்று பிரபு கூறினார்.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்தார். கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்-நடிகைகள் உதவி தொடர்கிறது.