சினிமா செய்திகள்

வெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு + "||" + Mammootty and Mohanlal postponed

வெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு

வெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு
மழை வெள்ளம் மலையாள பட உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
மழை வெள்ளம் மலையாள பட உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. வெள்ளம் புகுந்த ஊர்களில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

மழை வெள்ளத்துக்கு முன்பு திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளதாக பட அதிபர் ஒருவர் கூறினார். தமிழ் நடிகர்கள் படங்கள் வசூலும் பாதிப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பை தொடர்ந்து சில மலையாளப் படங்களை திட்டமிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வராமல் தள்ளி வைத்துள்ளனர். மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால் நிவின்பாலி இணைந்து நடித்துள்ள காயம்குளம் கொச்சுனி, பஹத் பாசில் நடித்துள்ள வரதன் ஆகிய படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

ஓணம் பண்டிகையில் மலையாள படங்கள் அதிக வசூல் ஈட்டும். ஆனால் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு மக்கள் மத்தியில் படங்கள் பார்க்கும் ஆர்வம் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.