சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்


சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்
x
தினத்தந்தி 21 Aug 2018 10:17 AM GMT (Updated: 21 Aug 2018 10:17 AM GMT)

இங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது வழங்கும் தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் வழங்கப்படும், சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார். 

மெர்சல் படத்திற்காக, விஜயின் பெயர், இந்த தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு நடிகர்கள் உள்ளனர். அவற்றில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே நடிகர், விஜய் தான். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், சிறந்த நடிகர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு,  வரும் 22ம் தேதி இவ்விருது விழா நடைபெற இருக்கிறது, இதில் விஜய் விருது ஜெயிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story