சினிமா செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி + "||" + Vijay has been fined Rs. 70 lakh for flood-affected Kerala

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்


சென்னை

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு  உலகம் முழுவதும் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு,  திரைப்பட கலைஞர்கள், பொது மக்கள் , தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என  பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகின்றனர்.  

 நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி. கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.3 லட்சம் வீதம் விஜய் நிதியுதவி அளித்துள்ளார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது . மேலும் ரூ.160 கோடி நிதியுதவி வழங்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.87 கோடிக்கும் மேலாக ஆன்லைன் போர்டல் மூலம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.