சினிமா செய்திகள்

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் உதவி + "||" + Kerala flood damage Actress Keerthi Suresh Rs 15 lakh assistance

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் உதவி

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் உதவி
மழை, வெள்ளத்தால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி உதவி வழங்கி வருகிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.15 லட்சம் உதவி வழங்கி உள்ளார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனை அவர் நேரில் சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார்.

ஏற்கனவே நடிகர்–நடிகைகள் பலர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்–நடிகைகள் பலர் நிதி உதவி வழங்கி உள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களும் உதவி வழங்கி வருகிறார்கள்.


விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு–உடைகள் வழங்கி வருகிறார்கள்.