சினிமா செய்திகள்

நடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது + "||" + Actress Anushka meets the weight: the heroine has the least chance

நடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது

நடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது
அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005–ல் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
 அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவரது நடிப்பு திறமையை பறைசாற்றின. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், கார்த்தி என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

கடைசியாக அவர் நடித்த பாகுமதி படம் ஜனவரியில் வந்தது. அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இளம் கதாநாயகர்கள் அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுத்தனர். காரணம் அவரது எடை. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டினார். அதன் பிறகு கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடை குறையவில்லை. பாகுபலி–2 படத்தில் கிராபிக்ஸ் மூலம் உடலை ஒல்லியாக்கி இருந்தனர்.


 அதன்பிறகு உடல் எடை தொடர்ந்து கூடியதால் படங்கள் குறைந்தது. இப்போது அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. பாரதிராஜா இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். படங்கள் குறைந்ததால் அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரம் காட்டுகின்றனர். ஆனாலும் மாப்பிள்ளை அமையவில்லை.

40 வயதுக்கு மேற்பட்ட மாப்பிள்ளை வரன்களே வருகின்றன என்கின்றனர். அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகி அவை உண்மை இல்லை என்று அடங்கி உள்ளன. இந்த நிலையில் அனுஷ்காவின் உடல் எடை கூடிய புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டாகி விட்டாரே? என்று வியந்து பேசி வருகிறார்கள்.