சினிமா செய்திகள்

அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது + "||" + Ajiths "Vishwamam" was released by First Look

அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
அஜித்குமார் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. #Viswasam
சென்னை,

அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார், இதற்கு முன்பு சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஜித் நடித்து வரும் அதிரடி திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதுதொடர்பாக ஏராளமான டுவிட்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்ததால் இந்திய அளவில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட்லுக் ட்ரெண்டிங் ஆனது.


இந்த நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விதமான தோற்றத்தில் அஜித் தோற்றமளிக்கிறார். இது ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை டி.இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.

பொங்கல் தினத்தன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.