சினிமா செய்திகள்

வைரலாகும் விஸ்வாசம் பஸ்ட் லுக் குறித்து பிரபலங்களின் கருத்து + "||" + famous for Vishvamam First Look Celebrities comment

வைரலாகும் விஸ்வாசம் பஸ்ட் லுக் குறித்து பிரபலங்களின் கருத்து

வைரலாகும் விஸ்வாசம் பஸ்ட் லுக் குறித்து பிரபலங்களின் கருத்து
வைரலாகும் விஸ்வாசம் பஸ்ட் லுக் குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். #Vishvamam
சென்னை

அஜித் தற்போது `விஸ்வாசம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.  விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 3.40 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபஸ்ட் லுக் வந்ததுமே வழக்கம் போல் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

பிரபலங்கள் பலரும் விஸ்வாசம் ஃபஸ்ட் லுக் குறித்து தங்கள் கருத்தை வெளியிட்டு உள்ளனர்.