சினிமா செய்திகள்

45 நாட்களில், ‘சூப்பர் டூப்பர்’ + "||" + In 45 days, Super Duper

45 நாட்களில், ‘சூப்பர் டூப்பர்’

45 நாட்களில், ‘சூப்பர் டூப்பர்’
டைரக்டர் அருண் கார்த்திக், இயக்கும் படத்துக்கு, ‘சூப்பர் டூப்பர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
குறும் பட உலகில் முத்திரை பதித்த டைரக்டர் அருண் கார்த்திக், முதன்முதலாக வியாபார ரீதியிலான ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘சூப்பர் டூப்பர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

“இது, ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான திகில் படமாக உருவாக இருக்கிறது. கதாநாயகனாக துருவா நடிக்கிறார். இவர், ‘ஆண்மை தவறேல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர். ‘மேயாத மான்,’ ‘மெர்க்குரி,’ ‘பூமராங்,’ ‘அறுபது வயது மாநிறம்’ ஆகிய படங்களில் நடித்த இந்துஜா, கதாநாயகியாக நடிக்கிறார்.

“இது வழக்கமான படமல்ல என்பதை புரிந்துதான் கதாநாயகன்-கதாநாயகி ஆகிய இருவரும் நடிக்க சம்மதித்தார்கள். இதில், மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார். இவர், ‘மீசையை முறுக்கு,’ ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் நடித்தவர். ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தை பற்றி டைரக்டர் அருண் கார்த்திக் கூறும்போது, “கதைப்படி, கதாநாயகி இந்துஜா, ஒரு கல்லூரி மாணவி. அவர் குடும்பத்தில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதை வேலையில்லா பட்டதாரியான கதாநாயகன் எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது கதை. படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி, 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.