சினிமா செய்திகள்

விக்ராந்த்-வசுந்தராவுடன் ‘பக்ரீத்’ + "||" + with Vikrant-Vasundhara Bakrid

விக்ராந்த்-வசுந்தராவுடன் ‘பக்ரீத்’

விக்ராந்த்-வசுந்தராவுடன் ‘பக்ரீத்’
‘பக்ரீத்’ என்ற படத்தில் விக்ராந்த்-வசுந்தரா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
சிவா, சந்தானம் ஆகிய இருவரும் நடித்த ‘யாயா’ படத்தை தயாரித்தவர், எம்.எஸ்.முருகராஜ். இவர் தனது இரண்டாவது தயாரிப்பாக, ‘பக்ரீத்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘சிகை,’ ‘பட்சி’ ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு, இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு 
செய்கிறார்.

கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகி, வசுந்தரா. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கு பெறுகிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.

‘‘விவசாயம் செய்வதை 

பெருமையாக நினைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையில், ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது. அதனால் அவன் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே ‘பக்ரீத்’ படத்தின் கதை’’ என்கிறார், டைரக்டர் ஜெகதீசன் சுபு.

இந்தியா முழுவதும் பயணிக்கும் இந்த படத்தில், அந்தந்த ஊர் பழக்கவழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்ய இருப்பதாக டைரக்டர் ஜெகதீசன் சுபு கூறுகிறார். இதற்காக சென்னை, ராஜஸ்தான், கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கதாநாயகன் விக்ராந்த், ஒட்டகத்துடன் வரும் காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு பெறுவதால், அவர் தினமும் ஒரு மணி நேரம் ஒட்டகத்துடன் பழகி வருகிறார்.