சினிமா செய்திகள்

‘மேயாத மான்’ டைரக்டருடன் இணைந்தார், அமலாபால்! + "||" + meyatha maan Director film Amala Paul

‘மேயாத மான்’ டைரக்டருடன் இணைந்தார், அமலாபால்!

‘மேயாத மான்’ டைரக்டருடன் இணைந்தார், அமலாபால்!
‘மேயாத மான்’ பட டைரக்டரின் அடுத்த படத்தில் அமலாபால் நடிக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘மேயாத மான்’ படத்தை டைரக்டு செய்தவர், ரத்னகுமார். தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்த படத்தை இயக்க தயாராகிறார். இதில் கதைநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.

உணர்ச்சிகரமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதாலேயே அமலாபால் மற்ற படங்களில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார்.

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை, பெண்கள் முன்னேற்றத்துக்கான படம் அல்லது ‘சூப்பர் நேச்சுரல்’ திகில் படம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராதது. முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான-பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.

படத்துக்கு, ‘ஆடை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. விஜி சுப்பிரமணியன் தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திகில் கலந்த மர்ம படத்தில், அமலாபால்
திகில் கலந்த மர்ம படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார்.
2. அமலாபாலுடன் 2-வது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இதனை டுவிட்டரில் அவரே வெளியிட்டார்.
3. இரட்டை அர்த்த பேச்சு, உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை ; நானும் சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன்- நடிகை அமலாபால்
இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என சுசி கணேசனிடம் நானும் பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன். லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன் என்கிறார் நடிகை அமலாபால். #MeToo #MeTooIndia
4. பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட வேண்டும்... பரபரப்பாக இருக்க வேண்டும்... அதற்காக மற்ற கதாநாயகிகள் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அமலாபால்.