சினிமா செய்திகள்

கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி + "||" + For the people of Kerala Actors Raghava Lawrence - Amitabh Bachchan financial aid

கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி

கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி வழங்கி உள்ளனர். #KeralaFloods2018 #AmitabhBachchan #RaghavaLawrence
சென்னை

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல  திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியை பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வழங்கவுள்ளார். இது குறித்து டுவிட்டரில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வரை சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 51 லட்சம் கொடுத்ததோடு தன்னுடைய உடைமைகளையும் நடிகர் அமிதாப்பச்சன் வழங்கியுள்ளார்.

அமிதாப்பச்சன் தன்னுடைய உடைமைகளை பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆறு பெட்டிகளில் இந்த பொருட்களை அனுப்பியுள்ளார். 25 பேண்டுகள், 20 சட்டைகள், 80 சட்டை மேலுறைகள், 40 ஜோடி ஷூக்கள் இதில் அடக்கமாகும். இதோடு ரூ 51 லட்சத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.