கபடி வீராங்கனையாக கங்கனா ரணாவத்


கபடி வீராங்கனையாக கங்கனா  ரணாவத்
x
தினத்தந்தி 23 Aug 2018 11:45 PM GMT (Updated: 23 Aug 2018 7:18 PM GMT)

கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து வந்தார்.

ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர்.

ஸ்டூடியோக்களில் அரண்மனை அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இதன் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.  இதைத் தொடர்ந்து ‘பங்கா’ என்ற படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படம் இது. அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார். இவர் தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலாபால் நடித்த அம்மா கணக்கு படத்தை டைரக்டு செய்தவர்.

பங்கா படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, ‘‘அஸ்வினி படங்களை பார்த்து இருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதில் இருக்கும். பங்கா கதையை அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படத்தில் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாக நடிப்பதற்காக பயிற்சிகள் எடுத்துள்ளேன். கபடி வீராங்கனை கதாபாத்திரம் எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது’’ என்றார்.

Next Story