சினிமா செய்திகள்

சினிமா டான்ஸ் மாஸ்டர் தற்கொலை + "||" + Cinema Dance Master suicide

சினிமா டான்ஸ் மாஸ்டர் தற்கொலை

சினிமா டான்ஸ் மாஸ்டர் தற்கொலை
சினிமா துறையில் இருப்பவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு பட உலகில் இதுபோன்ற சாவுகள் நடக்கின்றன. இப்போது இந்தி பட உலகில் பிரபல நடன இயக்குனராக இருந்த அபிஷித் ஷிண்டே தற்கொலை செய்து உள்ளார்.

இவருக்கு 32 வயது ஆகிறது. மும்பையில் வசித்து வந்தார். அஜய்தேவ்கான், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். அபிஷித் ஷிண்டேவுடன் அவரது மனைவி தகராறு செய்து கோபத்தில் 3 மாதங்களுக்கு முன்பு 2 வயது மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.


இதனால் அபிஷித் ஷிண்டே மன அழுத்தத்தில் இருந்தார். மகளை பார்ப்பதற்காக பல முறை முயற்சித்தார். ஆனால் அதற்கு அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டுக் கதவு திறந்தே இருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ந்தனர்.

போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தற்கொலைக்கு முன்பு அபிஷித் ஷிண்டே எழுதிய கடிதம் ஒன்று அவர் கையில் இருந்தது. அதில் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மகள் பெயருக்கு மாற்றிவிடும்படி குறிப்பிட்டு இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
4. திருமணமான 1½ ஆண்டில் பட்டதாரி பெண் தற்கொலை - டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருமணமான 1½ ஆண்டுகளில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தார்
பெற்றோர் கண்டித்ததால் தஞ்சை அருகே கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.