சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற அடா சர்மா + "||" + Ada Sharma a vegetable seller for Hollywood film

ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற அடா சர்மா

ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற அடா சர்மா
‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் 1920, பீர், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர். அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


மாடர்ன் உடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்த அடாசர்மா காய்கறி விற்கும் தோற்றத்தில் ஆளே மாறி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அடாசர்மா புதிதாக தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.