சினிமா செய்திகள்

‘ஈகோ’ பிடித்த கதாநாயகர்கள்அஜித்குமாரை பின்பற்ற நடிகை அறிவுரை + "||" + Actress advise to follow Ajith Kumar

‘ஈகோ’ பிடித்த கதாநாயகர்கள்அஜித்குமாரை பின்பற்ற நடிகை அறிவுரை

‘ஈகோ’ பிடித்த கதாநாயகர்கள்அஜித்குமாரை பின்பற்ற நடிகை அறிவுரை
‘ஈகோ’ பிடித்த கதாநாயகர்கள் அஜித்குமாரை பின்பற்ற வேண்டும் என்று நடிகை மீனா வாசு அறிவுரை கூறியுள்ளார்.
சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இந்த படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 

பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜித்குமாருடன் தெலுங்கு நடிகை மீனா வாசுவும் சிறிய வேடத்தில் வருகிறார். இவர் படப்பிடிப்பில் அஜித்குமாருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அஜித்குமாரின் உயர்வான குணங்களை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–

‘‘ஒரு ரசிகையின் இனிய தருணம் இது. அஜித்குமாரை போன்ற ஒரு நல்ல மனிதரை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. எளிமையான, இனிமையான மனிதர் அவர். ஒரு வெற்றிப் படம் கொடுத்த உடனேயே சுபாவத்தில் மாற்றம் வருவதை பல நடிகர்களிடம் நான் பார்த்து இருக்கிறேன்.  ஈகோ என்ற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களெல்லாம் அஜித்குமாரின் காலை கழுவி தொட்டு வணங்கினால் அவரது உயர்வான குணத்தில் 10 சதவீதமாவது அவர்களுக்கு வரும் என்பது எனது கருத்து.’’

இவ்வாறு நடிகை மீனா வாசு கூறியுள்ளார்.