சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா + "||" + Anushka Sharma in a different look

வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா

வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா ‘சுய் தாகா–மேட் இன் இந்தியா’ படத்துக்காக கிராமத்து பெண் வேடம் ஏற்றுள்ளார்.
கதாநாயகிகள் இப்போதெல்லாம் அழகு, கவர்ச்சியில் இருந்து மாறி யதார்த்தமான சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வப்படுகிறார்கள். நயன்தாரா காது கேளாத பெண், பேய், கலெக்டர், போதை பொருள் கடத்துபவர் என்று நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. திரிஷா கொடி படத்தில் வில்லியாக வந்தார். மோகினியில் பேயாக மிரட்டினார். 

சமந்தா இமேஜ் பார்க்காமல் ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக மாடுமேய்ப்பது, வயல்வேலைகள் செய்வது என்றெல்லாம் நடித்து பாராட்டு பெற்றார். அனுஷ்காவும் இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக தோன்றினார். தமன்னா பாகுபலியில் வாள்வீச்சு, குதிரை சவாரி என்று அதிரடி காட்டினார். 

தீபிகா படுகோனே சரித்திர படத்தில் சித்தூர் ராணியாக வந்தார். கங்கனா ரணாவத்தும் ராணி லட்சுமிபாயாக நடிக்கிறார். இவர்கள் வரிசையில் இதுவரை மாடர்ன் உடையில் கவர்ச்சியாக பார்க்கப்பட்ட அனுஷ்கா சர்மாவும் ‘சுய் தாகா–மேட் இன் இந்தியா’ படத்துக்காக கிராமத்து பெண் வேடம் ஏற்றுள்ளார். 

தையல் கலைஞர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் வருண் தவான் தையல் கலைஞராகவும் அனுஷ்கா சர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் அனுஷ்கா சர்மா தோற்றத்தை பார்த்து ரசிகர்களும், திரையுலகினரும் வியந்து பாராட்டினர். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.