சினிமா செய்திகள்

ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு + "||" + Here’s Nimrat Kaur’s cryptic tweet amidst rumours of relationship with Ravi Shastri

ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு

ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு
ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மும்பை:

கிரிக்கெட் பிரபலங்களும்  மற்றும் பாலிவுட்  நட்சத்திரங்களும்  திருமணம்  செய்து கொள்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராட் கோலி அனுஷ்கா சர்மா .இப்போது இவர்கள் மிகவும் புகழ்பெற்ற பிரபலமான ஜோடிகளில் ஒருவராவர்.

அதுபோல்  கிரிக்கெட் வீரர ஜாகீர் கானை பாலிவுட் நடிகை சாகரிகா காட்ஜ்  திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நட்சத்திரங்கள் கீதா பஸ்ரா மற்றும் ஹசல் கெச் ஆகியோர் இப்போது ஹர்பஜன் மற்றும் யுவராஜ் சிங்கிற்கு மனைவிகள் ஆவார்கள் .

தற்போது இந்த வரிசையில் இணைய உள்ளனர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் .புனே மிர்ரர் தகவல் படி கடந்த 2 வருடங்களாக இருவரும்  காதலித்து வருகிறார்கள். இருவருக்கும்  பிசியான  கால அட்டவணைகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதற்கு நேரத்தை செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும்  இந்திய அணியுடன் சாஸ்திரி உள்ளார். அதுபோல்  நிம்ரத் கவுர் வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஆனால் இது கற்பனையான செய்தி என நடிகை நிம்ரத் கவுர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இது எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. என்னை பற்றி வந்தது எல்லாம்  கற்பனையானது. கற்பனை என்னை புண்படுத்தியது.  என கூறி உள்ளார்.