சினிமா செய்திகள்

‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’முழு நீள நகைச்சுவை படமாக உருவாகிறது + "||" + rajavin parvai raniyin pakkam movie

‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’முழு நீள நகைச்சுவை படமாக உருவாகிறது

‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’முழு நீள நகைச்சுவை படமாக உருவாகிறது
முழு நீள நகைச்சுவை படமாக ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ உருவாகிறது.
“தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய தாதாவின் உதவியை நாடிச் செல்கிறான், ஒரு இளைஞன். அவனை அந்த தாதா எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்? என்பதை கருவாக வைத்து, ஒரு நகைச்சுவை படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார், ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ படத்தின் டைரக்டர் அழகுராஜ். அவர் மேலும் கூறியதாவது:-

“காதலியை கண்டுபிடிக்கும் இளைஞன், அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அந்த திருமணத்தை இளைஞன் தடுத்தானா, இல்லையா? என்பதை உச்சக்கட்ட காட்சியாக வைத்து இருக்கிறோம்” என்றார், அழகுராஜ்.

இதில் கதாநாயகனாக ஆதவாவும், கதாநாயகியாக அவந்திகாவும் அறிமுகம் ஆகிறார்கள். விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: எம்.செந்தில் பாலசுப்பிரமணியம். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.