சினிமா செய்திகள்

நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியது எப்படி? படவிழாவில் பாக்யராஜ் ருசிகர பேச்சு + "||" + How to create comedy scenes Bhagyaraj speech at the cinema festival

நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியது எப்படி? படவிழாவில் பாக்யராஜ் ருசிகர பேச்சு

நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியது எப்படி? படவிழாவில் பாக்யராஜ் ருசிகர பேச்சு
கூத்தன் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக ராஜ்குமார், நாயகிகளாக ஸ்ரிஜிதா, சோனல் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெங்கி இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகரும், டைரக்டருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘நடிகர்களை கூத்தாடிகள் என்று சொல்வது உண்டு. அதையே இந்த படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். நகைச்சுவை உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் காட்சிகள் எனக்கு அவ்வப்போது தோன்றும். மவுன கீதம் படத்தில் சரிதா குளித்து விட்டு வந்து பின்னால் ஊக்கு மாட்டிவிட சொல்லும் காட்சி தனக்கு பிடித்து இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சொன்னார்.


ஒரு படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் நகைச்சுவை வைத்தால் நன்றாக இருக்கும் என்றனர். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு மாமி மீது விழுந்து அவரிடம் சாரி மாமி என்பது போன்றும் மாமியோ செம ஹாட் மச்சி என்று பதில் சொல்வது போன்றும் காட்சி எடுத்தோம் இப்போதுகூட செம ஹாட் மச்சி என்று ரேடியோவில் சொல்கிறார்கள்.

தென்னை மரம் நான்கு வருடத்தில் பலன் தரும் பனைமரத்துக்கு 18 வருடம் ஆகும் என்று எனது டிரைவர் சொன்னதை வைத்து ஒரு கேரக்டர் உதயம் ஆனது. ஒரு அப்பா அவரது மகனை எப்போதும் திட்டுவார். அந்த பையன் அப்பாவிடம் தென்னை விதைத்து இருந்தால் மூன்று நாலு மாதத்தில் பலன் கொடுக்கும். நீ விதைத்தது பனை என்பான்.

நாடக நடிகைகள் பின்னால் சுற்றும் ஊர் பெரியவர்களை மனதில் வைத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்’’

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

நடிகை நமீதா, இசையமைப்பாளர் பால்ஜீ, தயாரிப்பாளர் முருகன் ஆகியோரும் பேசினார்கள்.