சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார் + "||" + Telugu Actor Association President Sree reddy fraud complaint against Shivajira

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார்

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார்
தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார்.  இப்போது தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது மோசடி புகார்களை ஸ்ரீரெட்டி வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:–


‘‘தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா தரகர் போல் செயல்படுகிறார். எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சொல்ல நடிகர் சங்கத்தின் கதவை தட்டினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. விளம்பரத்துக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி நான் நடிக்கிறேன் என்று கேவலமாக பேசினார். எனது பாவம் அவரை சும்மா விடாது.  நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதற்காக அமெரிக்காவில் நிதி திரட்டினார்கள். அந்த பணத்தை சிலருடன் சேர்ந்து அவர் தின்று விட்டார். ஒரு முன்னணி நடிகருக்கும் வசூலான அந்த பணத்தில் இருந்து பெரிய தொகை போய் இருக்கிறது.

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்காக பல கோடிகள் எனக்கு தருவதாகவும் பேரம் பேசினார். அந்த பணத்தை நான் வாங்கவில்லை. வயதான தனது தந்தை, தாயையே சிவாஜிராஜா கவனிக்கவில்லை. வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதாக பணம் வசூலித்து மோசடி செய்தது வெட்கக்கேடு’’.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.