சினிமா செய்திகள்

மாணவி சோபியா சம்பவம்: நடிகர் சித்தார்த் கருத்து + "||" + Student Sofia Event: Actor Siddharth Comment

மாணவி சோபியா சம்பவம்: நடிகர் சித்தார்த் கருத்து

மாணவி சோபியா சம்பவம்: நடிகர்  சித்தார்த்  கருத்து
தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்து இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் இந்த சம்பவம்  சர்ச்சையான விவாதமாக மாறி இருக்கிறது.  இது குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘இந்தியாவில் அரசியல்வாதிகளை புகழ்ந்து எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சத்தமாக கோ‌ஷங்கள் போட்டு அமைதியை கெடுக்கலாம். சட்டத்துக்கு விரோதமாக சுவரொட்டிகள் ஒட்டலாம். பேனர்கள் வைக்கலாம். மேளதாளங்கள் முழங்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கோ‌ஷம் போடக்கூடாது.


எதிர் சிந்தனை உள்ளவர்கள் ஏதேனும் முத்திரை குத்தி தடுக்கத்தான் செய்வார்கள். அந்த மாணவியை நக்சல்வாதி, சமூக விரோதி என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சோபியா சம்பவம் நடந்தது விமான நிலையத்தில் என்றே தெரிகிறது. விமான சேவை நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ, இதில் எந்த பிரச்சினையும் செய்ததாக தெரியவில்லை.’’

இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.