சினிமா செய்திகள்

பாலியல் தொல்லைகளுக்கு கிளம்பும் எதிர்ப்புகள் : நடிகை ஆண்ட்ரியா வரவேற்பு + "||" + Depart opposition to sexual harassment: Andrea welcome

பாலியல் தொல்லைகளுக்கு கிளம்பும் எதிர்ப்புகள் : நடிகை ஆண்ட்ரியா வரவேற்பு

பாலியல் தொல்லைகளுக்கு கிளம்பும் எதிர்ப்புகள் :  நடிகை ஆண்ட்ரியா வரவேற்பு
ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்–2’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து தனுசுடன் நடித்துள்ள வடசென்னை படம் திரைக்கு வர தயாராகிறது.
சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சைகள் குறித்து ஆண்ட்ரியா கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘யாருக்காவது நல்லது நடந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கெட்டது நடந்தால் அதை சொல்வது இல்லை. சினிமாவில் அந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டு வருகிறது. பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது.


அப்படி பேசினால்தான் தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். சினிமா துறையில் எனக்கு அந்த மாதிரி நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை. அது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலியல் தொல்லைகள் எனக்கு நடந்தது என்று வெளியே வந்து தைரியமாக சொல்பவர்களையும், அப்படி நடப்பதை கண்டித்து பேசியவர்களையும் பாராட்ட வேண்டும்.

எனக்கு நடிப்பு, இசை இரண்டு கண்கள் மாதிரி. எதில் வாய்ப்பு வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்வேன். ஒரு படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டால் அதில் எத்தனை கதாநாயகர்கள் இருக்கிறார்கள். எத்தனை கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பது இல்லை. எனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும்தான் கண்டுகொள்வேன்.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.