சினிமா செய்திகள்

புதுமுகங்கள் நடிக்கும் நகைச்சுவை படம்‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ + "||" + Like Pannunga Share Pannunga

புதுமுகங்கள் நடிக்கும் நகைச்சுவை படம்‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’

புதுமுகங்கள் நடிக்கும் நகைச்சுவை படம்‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’
புதுமுகங்கள் நடிக்கும் நகைச்சுவை படத்துக்கு, ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ படம் பற்றி டைரக்டர் சு.சத்தியசீலன் கூறியதாவது:-

‘‘2 குடும்பங்களுக்கு இடையே பகை இருந்து வருகிறது. அந்த குடும்பத்தினரை கண்ணால் பார்ப்பதே பாவம் என்று 2 குடும்பத்தினரும் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள். அப்படிப்பட்ட 2 குடும்பங்களை சேர்ந்த ஆணும், பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும்? முந்தைய தலைமுறை மோதிக்கொள்ள-அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்பதுதான் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது, முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாக தயாராகி வருகிறது. புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். சவுந்தர்யன் பாடல்களை எழுதி இசையமைக்கிறார். அருணாசலம் தியேட்டர்ஸ் 
ஏ.சரவணன் தயாரிக்கிறார்.’’