சினிமா செய்திகள்

தீபாவளி விருந்தாக வருகிறது, விஜய் நடித்த ‘சர்கார்’ + "||" + Vijay Acted Sarkar

தீபாவளி விருந்தாக வருகிறது, விஜய் நடித்த ‘சர்கார்’

தீபாவளி விருந்தாக வருகிறது, விஜய் நடித்த ‘சர்கார்’
விஜய் நடித்து வந்த ‘சர்கார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது, விஜய் நடிக்கும் 62-வது படம்.
விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கதாநாயகிகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்  மற்றும் ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நடித்தார்கள். இத்துடன், ‘சர்கார்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.

படத்தின் குரல் சேர்ப்பு, படத் தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் தொடங்கி விட்டன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.