சினிமா செய்திகள்

திலீப்பை 2–வது திருமணம் செய்த நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம் + "||" + Dileep was married to 2nd Actress Kavya Madhavan is pregnant

திலீப்பை 2–வது திருமணம் செய்த நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்

திலீப்பை 2–வது திருமணம் செய்த நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்
விக்ரம் நடித்த ‘காசி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காவ்யா மாதவன். ‘என் மன வானில்’ ‘சாதுமிரண்டா’ உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
மலையாளத்தில் 70–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குவைத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை 2009–ல் திருமணம் செய்து அதே வருடத்திலேயே அவரை பிரிந்தார்.

2011–ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் மலையாள நடிகர் திலீப்புடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. முதல் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்து செய்து விட்டு காவ்யா மாதவனை 2016–ம் ஆண்டு நவம்பர் 25–ந்தேதி திலீப் 2–வது திருமணம் செய்து கொண்டார்.


அதன்பிறகு மலையாள நடிகையை கடத்திய வழக்கில் திலீப் சிக்கி ஜெயிலுக்கு சென்றார். இதனால் மலையாள நடிகர் சங்கம் அவரை சங்கத்தில் இருந்து நீக்கியது. ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் சங்கத்தில் சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால் நடிகைகள் எதிர்ப்பால் அது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் காவ்யா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவ்யா மாதவன் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். திலீப்புக்கு முதல் மனைவி மூலம் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.