சினிமா செய்திகள்

பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் காலமானார் + "||" + Actor Kovai Senthil died

பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் காலமானார்

பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் காலமானார்
பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் காலமானார்.
சென்னை,

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் கோவை செந்தில். பல படங்களில் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார்.

பொதுவாக பல சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் மிகவும் எதார்த்தமான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். 

இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார்.  இவரது மறைவு  ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவரது மறைவிற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஏய் படத்தில் இவர் வடிவேலுவுடன்  சேர்ந்து நடித்த காமெடி மிகவும் பிரபலமானது.

நடிகர் கோவை செந்தில், படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய், இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் என்று பல மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். 

பெரும்பாலும், இயக்குனர் விக்ரமன் இயக்கிய படங்களில் அதிகளவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை செந்திலின் மறைவுக்கு நடிகர்-நடிகைகள்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.