சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ் + "||" + How did love romance with Priyanka Chopra? - singer Nickzonas

பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ்

பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ்
விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
 பிரியங்கா சோப்ராவுக்கும் அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. அமெரிக்காவில் நிச்சயதார்த்தமும் முடிந்தது.

அதன்பிறகு மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள நிக்ஜோனாஸ் குடும்பத்துடன் இந்தியா வந்து இருந்தார். பின்னர் இருவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டனர். பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் நியூ யார்க்கில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? என்று நிக் ஜோனாஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘பிரியங்கா சோப்ரா ஒரு நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.

அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகி விட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்.’’

இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
2. திருமணத்துக்கு தயாராகிறார் : பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடிக்கு நகைகள்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ டி.வி. தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமானார்.
3. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்
பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது.
4. பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான நிக் ஜோனாஸுக்கும் இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
5. ஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி
நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் ரூ.77 கோடி சம்பாதித்து இருக்கிறார்.