சினிமா செய்திகள்

ரசிகர்களை சந்திக்கும் தனுஷ் + "||" + Dhanush meets fans

ரசிகர்களை சந்திக்கும் தனுஷ்

ரசிகர்களை சந்திக்கும் தனுஷ்
நடிகர்கள் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளனர். கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி விட்டார்.
ரஜினிகாந்தும் ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றி விரைவில் அரசியல் கட்சியாக அறிவிக்க இருக்கிறார். விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சமூக சேவை பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.

நடிகர் விஷால் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேவைப்பட்டால் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறும் என்றும் அறிவித்தார்.

சூர்யா, கார்த்தி, ஆகியோருக்கும் ரசிகர் மன்றங்கள் செயல்படுகின்றன. இப்போது நடிகர் தனுசும் ரசிகர் மன்றத்தில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்துக்கு பிரபல இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவை தலைவராக நியமித்தார். சமூக வலைத்தளங்களிலும் தனது படங்கள் பற்றிய தகவல்களை பகிரவும் விளம்பரப்படுத்துவும் ரசிகர் குழுக்களை நியமித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் ரசிகர்களை தனுஷ் சந்தித்து பேசுகிறார். அப்போது புதிய திட்டங்களை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது. தனுஷ் தற்போது வடசென்னை, மாரி–2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு வெளியாகிறது.தொடர்புடைய செய்திகள்

1. காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. #kaala
2. நடிகர் தனுஷ் பேனர் கிழிக்கப்பட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல், 6 பேர் கைது
நடிகர் தனுஷ் பேனர் கிழிக்கப்பட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக, நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.