சினிமா செய்திகள்

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி + "||" + Pettai scenes in the movie was released starring Rajinikanth

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
லக்னோவில் இதன் படப்பிடிப்பு  இப்போது நடந்து வருகிறது. ரஜினிகாந்த் அங்கு முகாமிட்டு நடித்து வருகிறார்.

ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நடந்தபோது ரசிகர்கள் அவற்றை செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் படத்தின் கதை சம்பந்தமான யூகங்கள் முன்கூட்டியே கசிந்தது. அதுபோன்று நடப்பதை தடுக்க ‘பேட்ட’ படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு அளித்து இருந்தனர்.


மேற்கு வங்காளத்திலும் உத்தரகாண்டிலும் 2 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடந்தபோது படக்குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கி இருந்தனர். படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல தடையும் விதித்தனர். சுற்றிலும் பாதுகாவலர்களை நிறுத்தி ரசிகர்களையும் தடுத்தார்கள்.

ஆனால் லக்னோவில் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில் பாதுகாப்பையும் மீறி ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை யாரோ செல்போனில் படம் பிடித்து வெளியிட்டு விட்டனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் போலீஸ் வாகனத்தின் முன் இருக்கையில் ரஜினிகாந்த் அமர்ந்து செல்வது போன்றும் அருகில் பர்தா அணிந்த பெண் நடந்து செல்வது போன்றும் காட்சி உள்ளது.

இன்னொரு படத்தில் ரஜினிகாந்த் காவி சட்டை, கழுத்தில் கருப்பு துண்டு அணிந்து நடந்து செல்வது போன்ற காட்சி இருந்தது. முந்தைய காலா, கபாலி படங்களில் கருப்பு சட்டையுடன் வந்த ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் காவி சட்டைக்கு மாறி இருப்பதை பரபரப்பாக பேசுகின்றனர். பா.ஜனதாவுடன் இணைத்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடக்கின்றன. இந்த படங்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீஸ் வாகனத்தில் செல்வதால் பேட்ட படம் பயங்கரவாதத்துக்கு எதிரான கதையாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.