சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகிறார் நடிகை சமந்தா + "||" + Actress Samantha is the producer

தயாரிப்பாளராகிறார் நடிகை சமந்தா

தயாரிப்பாளராகிறார் நடிகை சமந்தா
“சினிமா என்பது வியாபாரம். நான் நடித்துள்ள படங்களில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரவேண்டும் நஷ்டமடைய கூடாது என்று விரும்புவேன்.
சமந்தா திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் பேசியதாவது:-

“சினிமா என்பது வியாபாரம். நான் நடித்துள்ள படங்களில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரவேண்டும் நஷ்டமடைய கூடாது என்று விரும்புவேன். நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதை விட படத்துக்கு போட்ட பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வருடத்தில் நான் நடித்த எல்லா படங்களுமே நன்றாக ஓடின.

கிராமத்து பெண் வேடத்தில் நடித்து இருந்த ரங்கஸ்தலம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாகவும் இருந்தது. இரும்புத்திரை படத்திலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. மகாநதியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும் படம் வசூல் குவித்தது.

படங்கள் வெற்றி பெற்றதற்கு எனது அதிர்ஷ்டம் காரணமாக இருந்தாலும் அதற்கு பின்னால் எனது கடின உழைப்பும் இருக்கிறது. கதை தேர்வில் அக்கறை எடுக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் எனக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது இல்லை.

திருமணத்துக்கு பிறகு என்னை வலிமையான பெண்ணாக தயார்படுத்தி இருக்கிறேன். குழந்தை பெற்றுக்கொள்ளும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அதை கடவுள் பார்த்துக்கொள்வார். எனது கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். விரைவில் படங்கள் தயாரிப்பிலும் இறங்க திட்டமிட்டு உள்ளேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.