சினிமா செய்திகள்

தெண்டுல்கர்-சார்மியை இணைத்து அவதூறு? நடிகை ஸ்ரீரெட்டிக்கு கடும் எதிர்ப்பு + "||" + Actress Sreerthi is a strong protest

தெண்டுல்கர்-சார்மியை இணைத்து அவதூறு? நடிகை ஸ்ரீரெட்டிக்கு கடும் எதிர்ப்பு

தெண்டுல்கர்-சார்மியை இணைத்து அவதூறு? நடிகை ஸ்ரீரெட்டிக்கு கடும் எதிர்ப்பு
தெண்டுல்கர்-சார்மியை இணைத்து அவதூறு? நடிகை ஸ்ரீரெட்டிக்கு கடும் எதிர்ப்பு
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அவரது பாலியல் புகாரில் சிக்கினார்கள்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் சினிமா படமாகவும் தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். தனது முகநூல் பக்கத்தில் பாலியல் புகார் பதிவை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பற்றி பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

“சச்சின் தெண்டுல்கரன் ஐதராபாத் வரும்போதெல்லாம். சார்மி’ங்கான பெண் அவரோடு தொடர்பில் இருப்பார். இவர்கள் சந்திப்புக்கு சாமுண்டேஸ்வரர் சாமி ஏற்பாடு செய்து கொடுப்பார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

சச்சின் தெண்டுல்கரன் என்பது சச்சின் தெண்டுல்கரையும், சார்மி’ங் பெண் என்பது நடிகை சார்மியையும் குறிப்பதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பரவி ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்புகள் குவிகின்றன.

முகநூலில் அவரை கண்டித்து பலரும் பேசி வருகிறார்கள். “சச்சின் தெண்டுல்கரை நாங்கள் மதிக்கிறோம். அவரை இழிவுபடுத்தி மலிவான விளம்பரம் தேட வேண்டாம்” என்று ஒருவர் எச்சரித்து உள்ளார்.

“தெண்டுல்கருக்கும், சார்மிக்கும் தொடர்பு இருந்தால் உனக்கு என்ன பிரச்சினை? சச்சின் எங்கள் இதயத்தில் வாழ்கிறார். அவரது மதிப்பு உனக்கு தெரியாது” என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

“எங்கள் வழிபாட்டு அறையில் சச்சின் படம்தான் உள்ளது. அவரை இழிவுபடுத்துவதை நிறுத்திவிடு” என்று ஒருவரும் “ஒரு கிராமத்தை சச்சின் தத்தெடுத்து இருக்கிறார். அவரது மரியாதையை அந்த கிராமத்தைபோய் பார்த்து தெரிந்து கொள்” என்று மற்றொருவரும் பதிவிட்டு ஸ்ரீரெட்டியை கண்டித்து உள்ளனர்.