சினிமா செய்திகள்

சம்பள பாக்கி கேட்டு வழக்கு போடுவதா? நடிகர் அரவிந்தசாமிக்கு மனோபாலா எதிர்ப்பு + "||" + Manobala resistance to actor Aravindasamy

சம்பள பாக்கி கேட்டு வழக்கு போடுவதா? நடிகர் அரவிந்தசாமிக்கு மனோபாலா எதிர்ப்பு

சம்பள பாக்கி கேட்டு வழக்கு போடுவதா? நடிகர் அரவிந்தசாமிக்கு மனோபாலா எதிர்ப்பு
சதுரங்க வேட்டை’ என்ற படம் நட்ராஜ் கதாநாயகனாக நடித்து 2014-ல் வெளிவந்தது.
சதுரங்க வேட்டை’ என்ற படம் நட்ராஜ் கதாநாயகனாக நடித்து 2014-ல் வெளிவந்தது. இந்த படத்தை நடிகர் மனோபாலா தயாரித்து இருந்தார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை சதுரங்க வேட்டை-2 என்ற பெயரில் மனோபாலா தயாரித்து உள்ளார்.

இதில் அரவிந்தசாமி, திரிஷா நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்குவர தயாராகிறது. இந்த நிலையில் நடிகர் அரவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்தார். சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததில் தனக்கு ரூ.1.79 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும் அதனை வட்டியுடன் திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர் விசாரித்து அரவிந்தசாமி தரப்பினரிடம் படத்தை வெளியிட தடைகேட்காத நிலையில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அரவிந்தசாமி தரப்பில் படம் வெளியீட்டை தடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. சம்பளப்பாக்கி வந்து சேர வேண்டும் என்றனர்.

இதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்த வழக்கு குறித்து மனோபாலா கூறும்போது, “அரவிந்தசாமிக்கு ரூ.1 கோடிதான் சம்பள பாக்கி இருக்கிறது. அதை தரமுடியாது என்று நான் கூறவில்லை. சங்கத்தை அணுகாமல் யாரோ தூண்டுதலில் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார். டப்பிங் பேசி முடித்து படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு முன்னால் சம்பள பாக்கியை அவருக்கு கொடுத்து விடுவேன். எனது தரப்பு விளக்கத்தை வக்கீல் 20-ந் தேதி கோர்ட்டில் தெரிவிப்பார்” என்றார்.