சினிமா செய்திகள்

பாலியல் சர்ச்சையில் நடிகைகளுக்கு எதிராக பேசிய மம்தாவுடன் ஜோடி சேர்ந்த திலீப் + "||" + Dilip pair with Mamta

பாலியல் சர்ச்சையில் நடிகைகளுக்கு எதிராக பேசிய மம்தாவுடன் ஜோடி சேர்ந்த திலீப்

பாலியல் சர்ச்சையில் நடிகைகளுக்கு எதிராக பேசிய மம்தாவுடன் ஜோடி சேர்ந்த திலீப்
பாலியல் சர்ச்சையில் நடிகைகளுக்கு எதிராக பேசிய மம்தாவுடன் ஜோடி சேர்ந்த திலீப்
கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது அவர் ஜாமீனில் இருக்கிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பிரச்சினையில் மலையாள நடிகைகள் அனைவரும் திலீப்புக்கு எதிராக திரண்டனர். மம்தா மோகன்தாஸ் மட்டும் மறைமுகமாக திலீப்பை ஆதரித்தார். திலீப்பை எதிர்த்து நடிகைகள் பாதுகாப்புக்காக மஞ்சுவாரியர் தலைமையில் மலையாள நடிகைகள் சினிமா பெண்கள் கூட்டமைப்பை தொடங்கியபோது மம்தா மோகன்தாஸ் அதில் உறுப்பினராக சேரவில்லை.

திலீப்பை நடிகைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்தியபோது மம்தா மோகன்தாஸ் மட்டும், “நடிகைகள் பாலியல் பிரச்சினைகளில் பாதிக்கப்படும்போது அதற்கு அவர்களும்தான் காரணம். அவர்களுக்கும் இதில் பாதி பொறுப்பு இருக்கிறது” என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

இதற்கு ரீமா கல்லிங்கல், “பாலியல் வன்கொடுமை செய்தாலோ கடத்தப்பட்டாலோ நடிகை எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு” என்று சொல்லி பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகும் புதிய மலையாள படத்தில் நடிக்கும் திலீப்புக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். திலீப் பரிந்துரையில் மம்தாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.