சினிமா செய்திகள்

கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி + "||" + Nominal sex complaint

கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி

கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014 முதல் 2016 வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் பிராங்கோ மூலக்கல் மீது தேவாலய நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் போலீசாரும் புகாரை கண்டு கொள்ளவில்லை என்றும் கண்டித்து கன்னியாஸ்திரிகள் 5 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ ஜார்ஜ் பாலியல் வன்கொடுமை புகார் கூறிய கன்னியாஸ்திரியை விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜ் எம்.எல்.ஏவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்திலும் அவருக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் வைரலாகி உள்ளன.

தமிழில் தனுஷ் ஜோடியாக மரியான் மற்றும் பூ, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதியும் ஜார்ஜ் எம்.எல்.ஏவை கண்டித்துள்ளார். “ஜார்ஜ் கூறியுள்ள கருத்து வெறுக்கத்தக்க வாந்தியை போன்றது. கன்னியாஸ்திரி பிரச்சினையில் அவருக்கு ஆதரவாக எழுந்துள்ள பிரசாரம் பெருமையாக இருக்கிறது. கன்னியாஸ்திரிகள் தைரியத்தை பாராட்டுகிறேன்” என்று பார்வதி கூறியுள்ளார். இதுபோல் இந்தி நடிகை ரவீனா தாண்டனும் ஜார்ஜ் எம்.எல்.ஏவை கண்டித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்
பிராங்கோ மூலக்கல் மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகாரில் முக்கிய சாட்சி மர்ம மரணம் அடைந்தார்.
2. கன்னியாஸ்திரி பாலியல் புகார்: ‘‘குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்’’ –மஞ்சு வாரியர்
கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.