சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம் + "||" + Special scenes of Sivagragya's Seemaraja canceled

சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்

சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்
சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார்.
சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். சீமராஜா தமிழ்நாடு முழுவதும் நேற்று திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்தனர்.

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கம். அதுபோல் சீமராஜா படத்துக்கும் ரசிகர்கள் காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதிகாலை 4 மணி 5 மணி என்று 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

அதிகாலை 4 மணிக்கு டிக்கெட்டுகளுடன் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் திரண்டார்கள். ஆனால் படத்தை திரையிடவில்லை. சீமாராஜாவை திரையிடுவதற்கான அனுமதி கடிதம் வராததால் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். நிதி பிரச்சினை காரணமாக சீமராஜா சிறப்பு காட்சிகளுக்கு கே.டி.எம் என்ற லைசென்ஸ் அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு ஏற்பட்டது. அதன்பிறகு தியேட்டர்களில் காலை 7 மணிக்கு மேல் சீமராஜா படம் திரையிடப்பட்டது. சீமாராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட கோர்ட்டு சமீபத்தில் தடைவிதித்தது.