சினிமா செய்திகள்

வித்தியாசமான விநாயகருடன் மோகன்லால் + "||" + Mohanlal with Vinayar

வித்தியாசமான விநாயகருடன் மோகன்லால்

வித்தியாசமான விநாயகருடன் மோகன்லால்
மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்ட விநாயகர் படம், அனைவராலும் பேசப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி, நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. பல சினிமா நட்சத்திரங்கள் இணையதளம் மற்றும் சமூகவலை தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். சில நடிகர்–நடிகைகள் தங்கள் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை படம் பிடித்து இணையத்திலும், சமூகவலை தளங்களிலும் வெளியிட்டு, வாழ்த்து கூறினார்கள்.

அவர்களில், மலையாள சூப்பர் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் வெளியிட்ட விநாயகர் படம், அனைவராலும் பேசப்பட்டது. விநாயகரை குத்துச்சண்டை வீரர் போல் அலங்கரித்து, பக்கத்தில் மோகன்லால் நிற்பது போன்ற அந்த புகைப்படம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது.