சினிமா செய்திகள்

நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள் + "||" + Nayantara's fans were forced to marry

நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்

நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று ‘செல்பி’ எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருப்பது போல் மேலும் ஒரு ‘செல்பி’ எடுத்து வெளியிட்டுள்ளார், விக்னேஷ் சிவன்.

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து இருவரும் சேர்ந்து எடுத்த ‘செல்பி’யை விக்னேஷ் சிவன் ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டுள்ளார். 

அதைப்பார்த்த ரசிகர்களோ, ‘‘சூப்பர் சார், தலைவியை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். கைவிட்டுவிடாதீர்கள்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் செல்பி வெளியிட்ட விக்னேஷ் சிவன், டுவிட்டரில் விநாயகர் சிலை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து தனது அடுத்த பட அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார், விக்னேஷ் சிவன். 

சமீபகால படங்களில் கதாநாயகன் அளவுக்கு துணிச்சலாக நடிக்கிறார், நயன்தாரா. சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், நயன்தாரா துணிச்சலான சி.பி.ஐ. அதிகாரி அஞ்சலியாக நடித்து இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் அவரிடம் அந்த வீரம் இல்லை. நாணம் மட்டுமே உள்ளது. அந்த நயன்தாராதானா இது? என்று வியக்கும் வகையில் காணப்படுகிறார்.