சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு + "||" + Actress Nayantara with VigneshShivan at Golden Temple

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று காலை பொற்கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். #Nayanthara
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று ‘செல்பி’ எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. 

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெற்றி அடைந்ததையடுத்து பொற்கோயிலில் நயன்தாரா வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு,  மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.