சினிமா செய்திகள்

500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம் + "||" + Actor Captain Raju passes away

500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்

500-க்கும் அதிகமான படங்களில்  நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
கொச்சி

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் கேப்டன் ராஜு. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அவர் நடித்துள்ளார். ரக்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்மத்தின் தலைவன், ஜல்லிக்கட்டு, சூரசம்ஹாரம், ஜீவா, சின்னப்பதாஸ் உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள் மறக்க முடியாதவை. ரஜினி, கமல், சத்யராஜ், மோகன் லால், மம்முட்டி என பெரிய நடிகர்களுடன் நடித்தவர் கேப்டன் ராஜு.

கடந்த ஜூலை மாதம் தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் அமெரிக்கா சென்றுக்கொண்டிருந்தபோது, கேப்டன் ராஜுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக விமானம் ஓமன் நாட்டில் தரையிறக்கப்பட்டு, அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ராஜு, இன்று காலை காலமானார். அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்

1. டிச.12 தனது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் -ரஜினி அறிவிப்பு
வருகிற டிச.12 தனது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு வழக்கு
மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
3. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
4. வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்
மெக்சிகோ கடற்கரையில் பொழுது போக்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
5. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி
அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறி உள்ளார். #MeToo