சினிமா செய்திகள்

பொற்கோவிலில் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா + "||" + Nayantara, Vignesh Shivan visit to Golden temple

பொற்கோவிலில் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

பொற்கோவிலில் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். இருவரும் நெருக்கமாக எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று சிலரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சென்னை எழும்பூரில் நயன்தாரா புதிதாக வாங்கி உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று சிலரும் பேசி வருகின்றனர்.

காதல் பற்றி இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. மற்றவர்கள் பேசுவதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஜோடியாக சுற்றும் படங்களை மட்டும் தவறாமல் வெளியிட்டு அதிர்வை உருவாக்கி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தியன்று சேர்ந்து எடுத்த படத்தை வெளியிட்டனர். அதை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கருத்து பதிவிட்டார்கள்.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்ட படங்களை விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் பொற்கோவில் முன்னால் குளத்தின் அருகில் நின்றும் கோவிலுக்குள் சென்று சாமிகும்பிடுவதுபோன்றும் இந்த படங்களை எடுத்து இருந்தனர்.

கோவிலுக்குள் உணவு பரிமாறும் இடத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பக்தர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...