சினிமா செய்திகள்

“பெரியாரின் கருத்து என்னை மாற்றியது” -நடிகர் கமல்ஹாசன் + "||" + Periyar comment me Changed Actor Kamal Hassan

“பெரியாரின் கருத்து என்னை மாற்றியது” -நடிகர் கமல்ஹாசன்

“பெரியாரின் கருத்து என்னை மாற்றியது” -நடிகர் கமல்ஹாசன்
கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடிக்க தயாராகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். முழு அரசியல் படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களை ஷங்கர் தேர்வு செய்துவிட்டார். கதாநாயகி முடிவாகவில்லை. நயன்தாரா பெயர் அடிபடுகிறது.
கமல்ஹாசன் தற்போது டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த மாதம் இறுதியில் இது முடிவதாக இருந்தது. ஆனால் மேலும் 5 நாட்கள் நீடித்து உள்ளனர். அதன்பிறகு இந்தியன்-2 பட வேலைகளை தொடங்குகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது அரசியல் சமூக விஷயங்களை கமல்ஹாசன் பேசி வருகிறார்.


கமல்ஹாசன் சொல்வதை பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் மீது கால் போட்டுக்கொண்டு கேட்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அவர்களிடம் அந்த குறையை கவிஞர் சினேகன் சுட்டிக்காட்டினார். அவர் கூறும்போது “கமல்ஹாசன் பெரிய மனிதர். அவருக்கென்று மரியாதை இருக்கிறது. அவர் பேசும்போது கால் மீது கால் போட்டுக்கொண்டு இருப்பது தவறு” என்றார்.

இதை கவனித்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

“சினேகன் சொன்னதை போல்தான் கிராமங்களிலும் சொல்வார்கள். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். நான் மூன்றரை வயதிலேயே பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கும் அப்போது இப்படி சொல்லிக் கொடுத்துத்தான் வளர்த்தார்கள். ஆனால் எனக்கு 12 வயது ஆகும்போது பெரியாரின் புத்தகங்களும் அவருடைய கருத்துக்களும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தின.

இயல்பாகவே கால்மீது கால் போட்டுக்கொள்வதை நான் விரும்புவது இல்லை. அது எனக்கு சவுகரியமாக இருக்காது. மற்றவர்கள் கால்மீது கால்போட்டு அமர்ந்து இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அதே நேரம் என் கால்மீது உங்கள் காலை போடாமல் இருந்தால் அதுவே போதும்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.