சினிமா செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன + "||" + Ajith's Vishwasam movie Shooting spot displays Leaked

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் விஸ்வாசம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்தைத்  சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.


மதுரை, தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் நாளில், படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன. இதில் அஜித், வில்லன்களோடு சண்டையிடும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

பர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் என அனைத்தையுமே திட்டமிட்டு வெளியிட்டு வரும் படக்குழு, இதனால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் சுசி கணேசன் தன் தந்தையை மிரட்டியதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
2. ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறிய இயக்குனர் பிரபல நடிகை பரபரப்பு புகார்
ஹீரோ முன் ”ஆடைகளை களைந்து நடனமாடு” என கூறியதாக இயக்குனர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறி உள்ளார் - வீடியோ
3. ‘விஸ்வாசம்’ படத்தில் மதுரை தமிழ் பேசும் அஜித்!
‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மதுரை தமிழ் பேசி நடிக்கிறார்.
4. அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
அஜித்குமார் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. #Viswasam
5. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக கூறி உள்ளார். #SriReddy #Varahi