சினிமா செய்திகள்

‘யு’ சான்றிதழ் கிடைக்கவில்லை தணிக்கையான மணிரத்னம் படம் + "||" + 'U' certificate is not available Mani Ratnam film censorship

‘யு’ சான்றிதழ் கிடைக்கவில்லை தணிக்கையான மணிரத்னம் படம்

‘யு’ சான்றிதழ் கிடைக்கவில்லை தணிக்கையான மணிரத்னம் படம்
பிரபல டைரக்டர் மணிரத்னம் இயக்கியுள்ள புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’.
இதில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதிராவ் ஹைதிரி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் ‘காற்று வெளியிடை’ படம் வந்தது. இப்போது செக்கச்சிவந்த வானம் படத்தில் அதிக நடிகர்கள் உள்ளதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனி கதைகளை உருவாக்கி ஒரு இடத்தில் இணைவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் காதல், அதிரடி, திகில் போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன என்றும் கூறுகின்றனர்.


இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த மாதம் இறுதியில் ‘செக்கச்சிவந்த வானம்’ படம் திரைக்கு வருகிறது. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்து ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படத்தில் சில சர்ச்சை காட்சிகள் இருப்பதால் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2 மணிநேரம் 23 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் காட்சிகள் உள்ளன.