சினிமா செய்திகள்

சுந்தர்.சி இயக்கும் படத்தில் புதிய தோற்றத்தில், சிம்பு + "||" + Simbu is the new look in the film directed by Sundar

சுந்தர்.சி இயக்கும் படத்தில் புதிய தோற்றத்தில், சிம்பு

சுந்தர்.சி இயக்கும் படத்தில் புதிய தோற்றத்தில், சிம்பு
சிம்பு நடித்து கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியானது. அதற்கு முந்தைய வருடம் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்து இருந்தார்.
சிம்பு  இப்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகிறார். அடுத்து அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.


இதில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பட வேலைகளுக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். அங்கு பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. இதில் சிம்பு கண்ணாடி அணிந்து குறுந்தாடியுடன் இளமையாக காட்சி தருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பை விரைவாக முடித்து ஜனவரியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.