சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி + "||" + Letter to the actor's association: Actresses fighting back against Dilip

நடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி

நடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும்  திலீப்புக்கு  எதிராக  நடிகைகள்  போர்க்கொடி
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.
 சமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார்.

இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் நடவடிக்கையை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று விமர்சித்து நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பினார்கள்.


எதிர்ப்பு காரணமாக மோகன்லால் பின் வாங்கினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பிறகு அதிருப்தி நடிகைகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை அடங்கி இருந்தது.

இந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் மீண்டும் நடிகர் சங்கத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள். மூவரும் இணைந்து நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த கடிதம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
2. நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் வெளிநாடு செல்ல எதிர்ப்பு
நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
3. நடிகர் திலீப், மோகன்லாலிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் - நடிகர் சித்திக்
நடிகர் திலீப், மோகன்லாலிடம் கடந்த 10-ந் தேதியே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என அம்மா சங்க செயலாளர் நடிகர் சித்திக் கூறி உள்ளார்.
4. முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.
5. நடிகைகள் எதிர்ப்பு: திலீப் விவகாரத்தில் மோகன்லால் பதில்
நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகைகள் எதிர்ப்புக்கு நடிகர் மோகன்லால் பதில் அளித்துள்ளார்.