சினிமா செய்திகள்

பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம் - நடிகர் கருணாஸ் பேச்சு + "||" + At the time of brushing teeth We will kill Actor Karunas Talk

பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம் - நடிகர் கருணாஸ் பேச்சு

பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம் - நடிகர் கருணாஸ் பேச்சு
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
சென்னை

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவ உள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார்.

கருணாஸ் பேசும் போது சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க. அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும். வரலாறு எனக்கும் தெரியும். சட்டமன்றத்திலேயே பேசினவன் தான் நான். உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளார்.

இது குறித்து தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த அவர் பிறர் மனம் புண்படும் படி பேசி இருந்தால் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி
இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார். பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார்.
2. சபாநாயகர் தனபாலை நீக்குவது தொடர்பாக கருணாஸ் மனு: சட்டசபை கூடும்போது திமுக பரிசீலிக்கும்- தி.மு.க எம். எல்.ஏ
சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர். #DMK #AIADMK
3. ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலை
ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலை செய்யப்பட்டார்.
4. கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுப்பு
கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.