சேரன் உதவியாளர் இயக்கும் ‘மெரினா புரட்சி’


சேரன் உதவியாளர் இயக்கும் ‘மெரினா புரட்சி’
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 20 Sep 2018 9:38 AM GMT)

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில், ‘ஜல்லிக்கட்டு’க்கு ஆதரவாக நடந்த இளைஞர்களின் போராட்ட த்தை கருவாக வைத்து, ‘மெரினா புரட்சி’ என்ற திரைப்படம் தயாராகிறது.

போராட்டத்தில் பங்கேற்ற நவீன்-சுருதி ஆகிய இருவரும் கதை நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். ராஜ்மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அல்ரூ பியான் இசை யமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாச்சியார் பிலிம்ஸ் தயாரிக்க, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், எம்.எஸ்.ராஜ். இவர், டைரக்டர் சேர னிடம் உதவி டைர க்டராக பணி புரிந்தவர். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘மெரினா போராட்டத்தின்போது உண்மையில் நடந்தது என்ன? என்பதை இந்த படத்தில் சொல்கிறோம். ‘பீட்டா’ அமைப் பின் நோக்கம் என்ன? அந்த போராட்டத்தில் ஒரு முன்னாள் மத்திய மந்திரி, ஒரு பிரபல நடிகை ஆகியோரின் பங்கு என்ன? என்பதை எந்தவித சமரசத்துக் கும் இடம் கொடுக் காமல் சொல்லியி ருக்கிறோம்.

போராட்டத்தை உண்மையாக ஒருங்கிணைத்த 18 பேர்களை கொண்ட இளைஞர் படை பற்றியும் படத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஒளிப் பதிவாளர் வேல்ராஜ், சம்பளமே வாங் காமல் பணி புரிந்து இருக்கிறார்.’’

Next Story