சினிமா செய்திகள்

திலீப்பை 2–வது திருமணம் செய்த காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு + "||" + Dileep was married to 2nd Baby shower for Kavya Madhavan

திலீப்பை 2–வது திருமணம் செய்த காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு

திலீப்பை 2–வது திருமணம் செய்த காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு
தமிழில் காசி, என்மன வானில், சாதுமிரண்டா ஆகிய படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் மலையாள நடிகர் திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் காதல் ஏற்பட்டது.

திலீப் தனது முதல் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டு காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திலீப் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்றார். இந்த வழக்கு தொடர்பாக காவ்யா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


இப்போது திலீப் ஜாமீனில் இருக்கிறார். காவ்யா மாதவன் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. காவ்யா மாதவன் மஞ்சள் கவுன் அணிந்து இருந்தார். நெருங்கிய உறவினர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் காவ்யா மாதவன் தனது 34–வது பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடினார். ஆழப்புழையில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருந்த திலீப் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மனைவி மஞ்சுவாரியருக்கு பிறந்த திலீப்பின் மகள் மீனாட்சியும் இதில் பங்கேற்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...