சினிமா செய்திகள்

விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi in the role of farmer

விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி

விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி
சினிமாவில் உயர்ந்ததும் அதிரடி கதைகளில் நடித்து தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்த ஆசைப்படும் கதாநாயகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி வித்தியாசமாக தெரிகிறார்.
விஜய் சேதுபதி தன்னை விட கதையை நம்புகிறார். இமேஜ் பார்க்காமல் என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிக்கிறார்.

இதனால் குறுகிய காலத்தில் சிறந்த நடிகர் என்று திரையுலகினரையும் ரசிகர்களையும் பேச வைத்து இருக்கிறார். பீட்சா விற்பவராக வந்த  பீட்சா, ஞாபக மறதி உள்ளவராக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரவுடி கதாபாத்திரம் ஏற்ற சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.


தர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார். இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

 சீதக்காதி படத்தில் வயதான விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் வேட்டி–சட்டையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார்.
2. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
3. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
4. சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள 96 படம் பிரச்சினைகளில் சிக்கி மீண்டு திரைக்கு வந்துள்ளது.
5. ‘சீதக்காதி’ படத்தில் 80 வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி!
பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஒரு படம், அவர்களின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும். அப்படி விஜய் சேதுபதிக்கு அமைந்த படம்தான், ‘சீதக்காதி.’